பட்டுவளர்ப்பு - ஒரு கண்ணோட்டம்

நம் இந்திய நாட்டில், பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் மல்பெரிச்செடி வளர்ப்பிற்கான, சாதகமான சூழ்நிலைகள் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் நிலவுகிறது. இந்த மாநிலங்கள் மொத்த மல்பெரி வளர்ப்பில் 97 சதவீதமும் பட்டு நூல் உற்பத்தியில் 95 சதவீதமும் கிடைக்கிறது.

            நம் நாட்டில், தமிழ்நாடு பட்டு உற்பத்தியில் நான்காவது இடத்தைப் பெறுகிறது. 1956 ஆம் ஆண்டுகளில், தமிழ்நாட்டில் கோயமுத்தூர், தர்மபுரி மாவட்டங்களில் மட்டும் குறைந்த அளவில் பட்டு வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது. பல செயல்பாட்டு திட்டங்களினால் பட்டு வளர்ப்பானது, தமிழ்நாட்டில் இதர சமதளப்பரப்பிற்கும் பரவியது. 1979 ஆம் ஆண்டிலிருந்து தொழில் மட்டும் வணிக துறையின் கீழ் பட்டு வளர்ப்பு துறை, பட்டு வளர்ப்பு துறை ஒரு மேம்பாட்டு சேலத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
ஆராய்ச்சி நிலையங்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய செலவு குறைக்கும் தொழில்நுட்பங்களினால், (பட்டுப்புழுவிற்கான தனி அறை, மல்பெரி தண்டு அறுவடை முறையில் புழு வளர்ப்பு, இளம்புழுவை விவசாயிகளுக்கு வழங்குதல்) பட்டு மகசூலும் இலாபமும் விவசாயிகளுக்கு அதிகமாக கிடைக்கிறது.

 தற்சமயம், தமிழ்நாட்டில் 30,000 விவசாயிகளால், 14,624 ஏக்கர் அளவு மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு வளருகிறது. காஞ்சிபுரம், கும்பகோணம், ஆரணி, சேலம், கோயமுத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலுள்ள நெசவு நெய்யும் மையங்களில் கைத்தறியாக பட்டு நெய்யப்பட்டு வருகிறது.

 

Sericulture

Sericulture

Sericulture

   
 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014